Jun 12

இளவரசர் சார்லஸ்- கமீலாவின் காதல் உரையாடலை கேட்டு மனம் நொந்து போன டயானா

பிரித்தானியா இளவரசர் சார்லஸ்- கமீலா ஆகிய இருவரின் காதல் உரையாடலை டயானா கேட்டது குறித்து பத்திரிகையாளர் Andrew Morton தற்போது தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் இளவரசர் சார்லஸ்- டயானா விவாகரத்திற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், திருமணத்திற்கு முன்னர் கமீலா என்ற பெண்ணுடன் சார்லஸ்க்கு தொடர்பு இருந்ததாகவும் இதனை அறிந்த டயானா மனம் உடைந்து வேறு பாதையில் பயணிக்க ஆரம்பித்ததாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் டயானாவுடன் வாழ்ந்து கொண்டிருக்கும்போதே சார்லஸ் ஒருமுறை காதல் ததும்ப கமீலாவுடன் பேசியதை டயானா கேட்டுள்ளார்.

சார்லஸ் குளித்துக்கொண்டிருக்கும்போது, வாழ்க்கையில் என்ன நடந்தாலும் நான் எப்போதும் உன்னுடன் இருப்பேன், நான் எப்போதும் உன்னை காதலிப்பேன் என தொலைபேசியின் வாயிலாக கமீலாவிடம் கூறியுள்ளார்.

இந்த உரையாடலை டயானா கேட்டுள்ளார். இதனால் மனம் உடைந்து போன இவர், கிளியரன்ஸ் வீட்டில் இருந்து பர்க்கிம்ஹாம் அரண்மனைக்கு குடியேறினார். அங்கு தனது வாழ்க்கை தனிமையில் கழிவதாக டயானா ஒருமுறை தெரிவித்திருந்தார்.

மேலும், நியூசிலாந்துக்கு சார்லஸ்-வுடன் டயானா சென்றிருந்தபோது, அங்கு தனது காதலி கமீலாவுக்கு தங்கத்தால் செய்யப்பட்ட Bracelet ஒன்றை வாங்கியுள்ளார். அதில் இவர்கள் இருவரின் செல்லப்பெயர்களான 'G and F’ என்ற எழுத்து பொறிக்கப்பட்டிருந்தது.

‘Gladys’ and ‘Fred’ என்பதே இவர்கள் இருவரின் செல்லப்பெயர்களாகும். இதனை அறிந்த டயானா மிகவும் மனவேதனையடைந்து தனது கணவரை விட்டு பிரிந்து தனிமை வாழ்க்கை வாழ ஆரம்பித்தார்.

அதன் பின்னர் தான் இவர்களுக்கு இடையேயான விரிசல் அதிகமாகி விவாகரத்து வரை சென்றது. தற்போது இந்த தகவல்களை பத்திரிகையாளர் Andrew Morton என்பவர் தெரிவித்துள்ளார்.