Mar 17

கடத்தப்பட்ட கப்பலும் இலங்கையர்களும் விடுதலை

கடத்தப்பட்ட  வர்த்தகக் கப்பலையும் அதில் உள்ள கப்டன் உள்ளிட்ட 8 இலங்கையர்களையும் சோமாலிய கடற்கொள்ளையர்கள் விடுவித்துள்ளனர்.

 

கொள்ளையர்களுக்கும் சோமாலியாவின் வடகிழக்கு பிராந்தியமான புன்ட்லன்டின் சிறப்பு கடல் சார் பொலிஸ் படைக்கும் இடையே இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச் சூட்டின் பின்னர் இடம்பெற்ற பேச்சுக்களையடுத்து எவ்வித நிபந்தனைகளும், கப்பமும் கோராத நிலையில் கொள்ளையர்கள் கப்பலையும், சிறைப்பிடிக்கப்பட்டவர்களையும் விட்டுவிட்டு விலகிச் சென்றதாக சிறப்புப் பொலிஸ் படையின் பணிப்பாளர் அப்துர் ரஹ்மான் மொஹம்மத் ஹ்சன் தெரிவித்தார்.

 


இதனையடுத்து கப்பலையும், அதில் இருந்த இலங்கையர்களையும் மீட்டதாகவும் அவர்களை பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் புன்ட்லன்ட் பிராந்தியத்தின் தலை நகரான பொசசோவின் துறை முகத்துக்கு அழைத்து சென்ருள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.