Sep 21

திரைப்படமாகிறது ஜெயாவின் வாழ்க்கை வரலாறு ; சசிகலாவாக நடிப்பவர் யார் தெரியுமா?

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு விரைவில் திரைப்படமாக உள்ளது. ஜெயாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தினை இயக்க உள்ளவர் பிரியதர்ஷினி என்ற பெண் இயக்குனர். திரைப்படம் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.


கடந்த 2016 டிசம்பரில் மறைந்த ஜெயலலிதாவின் வாழ்க்கையையொட்டி வெளியாகும் இத்திரைப்படத்திற்கு தி அயர்ன் லேடி – ஜெயலலிதா என பெயரிடப்பட்டுள்ளது. ஜெயலலிதாவாக நடிகை நித்யாமேனனும், ஜெயாவின் உயிர்தோழி சசிகலாவாக வரலட்சியும் நடிக்க உள்ளதாக தெரிகிறது.

இயக்குநர் மிஷ்கின் குழுவில் துணை இயக்குநராக பணியாற்றிய பிரியதர்ஷினி என்பவர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடன் மற்றும் ஹிந்தி என 4 மொழிகளில் இயக்க உள்ளார். இந்த படத்தின் முதல் போஸ்டரை இயக்குநர் முருகதாஸ் வெளியிட்டுள்ளார்.

முன்னதாக, ஜெயாவின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என அவரது அண்ணன் மகள் தீபா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.