Sep 21

கேரள கஞ்சாவுடன் இருவர் கைது


வவுனியா - தாண்டிக்குளம் தொடரூந்து நிலையத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது கேரள கஞ்சா வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 634 கிராம் கேரள கஞ்சா இதன்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த பேரூந்தை நிறுத்தி சோதனையிட்ட போது குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேகநபர்கள் மாத்தளை - கலுதாவல மற்றும் கிளிநொச்சி - பாரதிபுரம் பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது