Jun 12

யோகேந்திரநாதனின் ‘நீந்தி கடந்த நெருப்பாறு’ நூல் வெளியீட்டு நிகழ்வு

நா.யோகேந்திரநாதன் எழுதிய ‘நீந்தி கடந்த நெருப்பாறு’ நூல் வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜாவினால் வெளியிட்டு வைக்கப்பட்டது.

 நிகழ்வு கிளிநொச்சி கூட்டுறவுச் சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா கலந்து கொண்டதுடன், வடமாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன், நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், வடமாகாண சபை உறுப்பினர்களான பசுபதிப்பிள்ளை, அரியரத்தினம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

மேற்படி நூல் போர்க்காலச் சூழ்நிலையினை அடிப்படையாக வைத்து நூலாசிரியரினால் வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.