Sep 21

டொலரின் விலை மூன்றாவது நாளாகவும் அதிகரிப்பு


இலங்கை ரூபாய் ஒன்றின் விலை டொலரின் பெறுமதியுடன் ஒப்பிடும் போது நேற்றும் (20) வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை நேற்று 168.63  ரூபாவாக அதிகரித்துள்ளது. இந்தவகையில் கடந்த 18 ஆம் 19 ஆம் 20 ஆம் திகதிகளில் ஒவ்வொரு நாளும் டொலரின் விலை அதிகரித்து வந்துள்ளது.

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை  நேற்று முன்தினமும் 19 ஆம் திகதி 167.41 ரூபாவாக அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது