Sep 21

இஸ்லாம் மக்களின் முக்கிய பண்டிகையான மொகரம் பற்றிய வரலாறு

இஸ்லாம் மக்களின் குறிப்பிட்ட நாட்களில் ஒன்றான மொகரம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இமாம் ஹூசேன் அவர்களின் தியாகத்தை போற்றும் விதமாக இந்த நாளை இஸ்லாம் மக்கள் கடைப்பித்து வருகின்றனர். அதற்கான வரலாற்றை இனி பார்க்கலாம். 

தற்போதைய ஈராக் நாட்டில் அடங்கிய கர்பாலா என்ற இடத்தில் நபிகள் நாயகம் முகமதுவின் பேரனான இமாம் ஹூசேன் (ரஜி அன்) மற்றும் அவரின் குடும்பத்தினர் இஸ்லாமிய மத கட்டளையைப் பாதுகாக்கும் பொருட்டு தங்களின் இன்னுயிரை ஈந்து தியாகம் புரிந்த நாளே மொகரமாக கடைபிடிக்கப்படுகிறது. 

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள், கொள்கைக்காக மடிந்த இமாம் மற்றும் அவரது குடும்பத்தினரின் தியாகத்தை நினைவுகூறும் வகையில் மொகரம் தினத்தன்று ஊர்வலங்களை நடத்துகிறார்கள். 

இமாம் காட்டிய மனிதநேய வழியில் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.