Sep 21

இலங்கை ஐனாதிபதிக்கு எதிராக அமெரி்க்காவில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அமெரிக்க விஜயத்தின் போது அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துவதற்கு அங்குள்ள புலம்பெயர் தமிழ் அமைப்புகள் திட்டமிட்டுள்ளன.

எதிர்வரும் 25ம் திகதி ஜனாதிபதி நியுயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் பொதுசபைக்கூட்டத்தில் உரையாற்றவுள்ளார்.

இதன்போது ஐக்கிய நாடுகளின் தலைமையகத்துக்கு வெளியில் புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர்.அமெரிக்காவில் இருந்து செயற்படுகின்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற புலம்பெயர் அமைப்பு இந்த போராட்டத்தை ஒழுங்கு செய்துள்ளது.