Sep 21

விடுதலை புலிகளை பயங்கரவாத இயக்கமாக அடையாளப்படுத்த வேண்டும்

விடுதலை புலிகளை பயங்கரவாத அமைப்பு இல்லையென சர்வதேசத்திடம் சிலர் காட்ட முயற்சிகளை மேற்கொள்கின்றமையினால், அவ்வியக்கத்தை பயங்கரவாத இயக்கமாக அடையாளப்படுத்த வேண்டுமென புலம்பெயர் சிங்கள மக்கள் அமைப்பின் தலைவர் கலாநிதி நாலக கொடஹேலா குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வுக்கு சமாந்தரமான அரச சார்பற்ற அமைப்புகளின் அமர்வு நேற்று (வியாழக்கிழமை) ஜெனீவாவில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

“விடுதலை புலிகள் அமைப்பை அரசாங்கம் சாராத ஆயுத குழுவாகவே மனித உரிமைகள் ஆணையகம் அடையாளப்படுத்தியுள்ளதே ஒழிய பயங்கரவாத அமைப்பாக அடையாளப்படுத்தவில்லை.

இதனால் ஒருசிலர் அவர்களை பயங்கரவாத அமைப்பு இல்லையென வலியுறுத்த முயல்கின்றனர்.

மேலும் 2006 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை தீர்மானத்தின்போது புலிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களுக்கு எதிராக பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது.

ஆகையால் இவ்விடயத்தில் இலங்கை அரசாங்கம் சர்வதேசத்தினை தெளிவுப்படுத்தி விடுதலை புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பதற்கு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்” என கலாநிதி நாலக கொடஹேலா வலியுறுத்தியுள்ளார்.