Sep 20

பழங்களை மாத்திரம் உண்ணும் பெண்மணி!

ரஷ்யாவைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த சில ஆண்டுகளாக வாழைப்பழம் மற்றும் அப்பிள் மாத்திரமே சாப்பிட்டு வந்ததால், தற்போது அவர் வெறும் 17 கிலோ எடை மட்டுமே இருக்கிறார்.

ரஷ்யாவின் Barnaul பகுதியைச் சேர்ந்தவர் Kristina Karyagina. தற்போது 26 வயதாகும் இவர் தன்னுடைய பாடசாலை பருவத்திலிருந்தே சரியாக சாப்பிடுவதை நிறுத்தியுள்ளார்.

அதற்கு பதிலாக வாழைப்பழம், அப்பிள், தண்ணீர் மற்றும் ஜுஸ் போன்றவைகளையே குடித்து வந்துள்ளார். இதனால் உடல் மெலிந்து மிகவும் பரிதாபமாக காணப்பட்டுள்ளார்.

இது Anorexia நோய் என்று கூறப்படுகிறது. அதாவது நாம் அதிக எடை கொண்டுவிட்டோமோ என்ற பயத்தினால் சரியாக சாப்பிடாமல் இருப்பது, சாப்பிடாமல் இருந்தால், நம்முடைய பழைய நிலைமைக்கு வந்துவிடலாம் என்ற எண்ணம் என்றே கூறப்படுகிறது.

இந்நிலையில் Kristina Karyagina இன் நிலையை அறிந்த பிரபல தொலைக்காட்சி ஸ்டார் Maria Kokhno அவருக்கு உதவ முன்வந்துள்ளார்.

இதனால் சமூக வலைத்தளங்களில் தன்னை பின்பற்றும் சுமார் 520,000 இற்கும் மேற்பட்டோருக்கும் Kristina Karyagina இன் கதையை பகிர்ந்துள்ளார்.

ஏனெனில் Maria Kokhno-வும் இது போன்ற மோசமான நோயை சந்தித்து அதிலிருந்து போராடி வெளியில் வந்தவர். இதன் காரணமாக அதன் வலி என்ன என்பது எனக்கு தெரியும்.

நாம் கண்முன்னே சாப்பாடு இருக்கும் ஆனால் சாப்பிடமுடியாது. இறக்கும் தருவாயில் கூட கண்முன்னே சாப்பாடு இருந்தும் சாப்பிட முடியாது என்று அவர் கூறியுள்ளார்.

இவர் எடுத்த முயற்சியின் பயனாக Yan Goland என்ற மருத்துவர் இலவசமாக Kristina Karyagina இற்கு சிகிச்சையளிக்க முன்வந்துள்ளார்.