இரட்டைச் செய்மதிகள் விண்ணுக்கு ஏவப்பட்டன!
இயற்கை அபாயங்களை கணிக்கும் BeiDou-3 என்ற இரட்டைச் செய்மதிகளை சீனா விண்ணுக்கு ஏவியுள்ளது. கடந்த வாரம் இந்தியா, இதே காரணத்திற்காக இரண்டு பிரித்தானிய செய்மதிகளை விண்ணுக்கு ஏவியதைத் தொடர்ந்து, சீனா, ஒரே ரொக்கற்றில் இரு செய்மதிகளை இணைத்து விண்ணுக்கு அனுப்பியுள்ளது.
குறித்த ரொக்கற், சிசனங் செய்மதிகள் மையத்திலிருந்து நேற்று மாலை வெற்றிகரமாக விண்ணை நோக்கி ஏவப்பட்டுள்ளது.
குறித்த இரட்டை செய்மதிகள், BeiDou விண்ணோடம் தயாரிப்பு நிறுவனத்தின் 37, 38ஆவது தயாரிப்புக்களாகும்.
குறித்த நிறுவனம் தயாரித்த 12 செய்மதிகள் தற்போது விண்வெளி சுற்றுப்பாதையில் வட்டமிட்டுக்கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், இயற்கை அபாயங்களை உடனுக்குடன் கண்டறிந்து எச்சரிக்கை விடுப்பதற்கும் மனித தொடர்பாடல் சேவைகளை துரிய கதியில் செயற்படுத்துவதற்குமே இவ்விரட்டை செய்மதிகள் ஏவப்பட்டுள்ளன.
செய்மதிகள் இரண்டையும் சீன விண்வெளி தொழிநுட்ப கல்வியகமும், அவற்றைக் கொண்டு சேர்க்கும் ரொக்கற்றை அந்நாட்டின் விண் ஓடத் தொழிநுட்ப கல்விப்பிரிவும் வடிவமைத்துள்ளன.