Sep 20

இன்றைய வானிலை !

வட மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் 2  மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.


இன்றைய வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள எதிர்வு கூறலிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது,

இதேவேளை, மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் பதுளை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசுமென எதிர்வுகூறியுள்ளது.

மத்திய, மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுவதுடன் மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் 50 மில்லி மீற்றர் அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.