Jun 12

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இலங்கை - பாகிஸ்தான் இன்று மோதல்

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில், இன்று (திங்கட்கிழமை) நடக்கும் கடைசி லீக்கில் மேத்யூஸ் தலைமையிலான இலங்கையும், சர்ப்ராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தானும் (பி பிரிவு) மோதுகின்றன.சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில், இன்றுடன் லீக் சுற்று நிறைவடைகிறது.

கார்டிப்பில் இன்று (திங்கட்கிழமை) நடக்கும் கடைசி லீக்கில் மேத்யூஸ் தலைமையிலான இலங்கையும், சர்ப்ராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தானும் (பி பிரிவு) மோதுகின்றன. தொடக்க ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவிடம் 96 ரன் வித்தியாசத்தில் தோற்ற இலங்கை அணி அடுத்து இந்தியாவிடம் 322 ரன்களை ‘சேசிங்’ செய்து சாதனை படைத்தது. இதே போல் பாகிஸ்தானும் ஒரு வெற்றி (தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக), ஒரு தோல்வி (இந்தியாவுக்கு எதிராக) கண்டுள்ளது.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி அரைஇறுதிக்கு முன்னேறும். தோற்கும் அணி வாய்ப்பை இழந்து வெளியேறும். அதனால் இரு அணி வீரர்களும் களத்தில் வரிந்து கட்டி நிற்பார்கள். இவ்விரு அணிகளும் இதுவரை 147 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 84-ல் பாகிஸ்தானும், 58-ல் இலங்கையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் ‘டை’ ஆனது. 4 ஆட்டங்களில் முடிவில்லை.