Sep 19

கத்தி முனையில் பாரிய கொள்ளை: சாவகச்சேரியில் சம்பவம்

சாவகச்சேரி நகரிலுள்ள தனியார் நிதி நிறுவனமொன்றிலிருந்து கத்தி முனையில் பாரிய தொகை பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.


இன்று (புதன்கிழமை) காலை பணிநேரம் ஆரம்பிக்கப்பட்ட போது, கத்தியுடன் உள்நுழைந்த மர்ம நபர் அங்கிருந்து 18 இலட்சத்து 91 ஆயிரம் ரூபாயை கொள்ளையிட்டு சென்றுள்ளார்.

பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த பணத்தினை வங்கியில் வைப்பிலிடுவதற்காக அதிகாரிகள் எடுத்த போது நிறுவனத்திற்குள் நுழைந்த நபர் அங்கிருந்தோரை அச்சுறுத்தி பணத்தினை கொள்ளையிட்டு சென்றுள்ளான்.

சம்பவம் தொடர்பாக உடனடியாக பொலிஸாருக்கு முறைபாடு செய்யப்பட்டதை தொடர்ந்து, சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.