Sep 19

ஜெனீவா வரை சென்ற பால் பக்கற் விவகாரம்

அண்மையில் மகிந்த அணியினர் கொழும்பில் நடத்திய பேரணியின் போது வழங்கப்பட்ட பால் பக்கற்றுகள் தொடர்பில் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் முறைப்பாடு செய்யப்படவுள்ளது.ரியர் அட்மிரல் சரத் வீரசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த பக்கற் பாலை பருகிய 30 பேர் வரையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.போராட்டத்தைக் குழப்புவதற்காக திட்மிட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும். அது குறித்து மனித உரிமைகள் பேரவையில் முறைப்பாடு செய்யப்படவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.