Mar 17

கால அவகாசம் கொடுகக்கூடாது: நெடுமாறன் தலைமையில் தமிழக சிவில் அமைப்புக்கள் மனு

சென்னையில் உள்ள ஐநா துணைத் தூதரகத்தில் மனித உரிமை ஆணயத்துக்கு கையளிக்க வேண்டிய கோரிக்கை மனுவை தமிழ்நாடு பாண்டிச்சேரி கர்நாடக மாநிலங்களின் சிவில் இயக்கங்களின் சார்பில் கையெழுத்திட்ட பிரதிநிதிகள் குழு ஐநா பிரநிதியிடம் கையளித்துள்ளது

நிகழ்வில்உலகத்தமிழர்பேரமைப்பின்தலைவர்பழ.நெடுமாறன், திராவிடர் விடுதலை கழக பாண்டிச்சேரி மாநிலத் தலைவர், லோகு. அய்யப்பன், கர்னா டக மாநிலத்தின் கர்நாடக தமிழர் இயக்கத்தின் செயலாளர் தமிழடியான், தமிழர் நலம் பேரியக்கத்தின் தலைவர் திரைப்பட இயக்குனர் மு.களஞ் சியம், திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை நிலையச் செயலாளர் தவசிக் குமரன்,தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் துணைப் பொதுச்செயலாளர் அருணா பாரதி,தமிழக மக்கள் முன்னணியின் தலைவர் தோழர் பொழிலன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் தியாகு, தந்தை பெரியார் திராவிடக் கழகத்தின் சென்னை மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சசி, இளம் தமிழகம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில்,மாணவர் இயக்கத்தைச் சேர்ந்ததோழர் செம்பியன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்களும், பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.


34ஆம் அமர்வில் சிறிலங்கா அரசுக்கு அதன் உறுதிமொழிகளை நிறைவேற்ற மேற்கொண்டு அவகாசம் தரக் கூடாதென்றும், இந்தச் சிக்கலை ஐநா.பொதுப் பேரவையின் பார்வைக்கு அனுப்ப வேண்டுமென்றும், அனைத்துலகக் குற்ற வியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு அனுப்ப ஐநா பாதுகாப்பு மன்றத்துக்குப் பரிந்து ரை செய்ய வேண்டுமென்றும் ஈழமண்ணில் நடந்த திட்டமிட்ட இனப்படுகொ லைக்கு சர்வதேச விசாரணையை வலியுறுத்துவதோடு அங்கு தொடரும் கட்டமைக்கப்பட இன அழிப்பை தடுத்து நிறுத்துவதற்கும் .நா.மனித உரிமை ஆணையம் விரைந்து செயட்பட வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்த வேண்டுகோள் விண்ணப்பத்தில், கர்நாடகா பாண்டிச்சேரி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சிவில் அமைப்புக்களின் தலைவர்களோடு தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மாணவர் இயக்கங்களின் தலைவர்களும் ஓரணி யில் திரண்டு கையொப்பம் போட்டுள்ளார்கள்.

இக் கையெழுத்து இயக்கத்தில் தமிழ்நாட்டில் உள்ள ஈழ ஆதரவுத் தலை வர்க ளான உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன்,  திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி, தமிழ்த் தேசியப் பேரியக் ககத் தலைவர் பெ.மணியரசன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொது செயலாளர் கோவை இராமகிருட்டிணன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் .வெள்ளையன்  தமிழக மக்கள் முன்னணியின் தோழர். பொழிலன் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் மோகன கிருஷ்ணன் இயக்குனர்கள் சங்கத்தலைவர் விக்ரமன் சென்னை உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் நளினி தமிழர் நலம் பேரியக்கத்தின் தலைவர் மு.களஞ்சியம் இளந்தமிழகம் அமைப்பின் ஒருங்கிணை ப்பாளர் தோழர் செந்தில் தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் பொது செயலாளர் பாரதி கர்நாடகத்தை சேர்ந்த பெங்களூர் தமிழ் சங்கத் தலைவர் தாமோதரன், கர்நாடக தமிழர் மக்கள் இயக்கத் தலைவர், ராஜன், பெரி யார் விடுதலை கழகத் தலைவர், பழனி,கர்நாடக தமிழர் கட்சி செய லாளர்,தமிழடியான். பாண்டிச்சேரியை சேர்ந்த மக்கள் வாழ்வுரிமை இயக்கத் தலைவர் ஜெகன்நாதன், அம்பேத்கார் தொண்டர் படை தலைவர் பாவாடை ராயன், உள்ளிட்ட பல தலைவர்கள் அனைவரும் இந்த வேண்டு கோளில் தம்மை இணைத்துக் கொண்டு .நா. மனித உரிமை மன்றத்திடம் கையளித்த கோரிக்கை மனுவிலே கையொப்பம் போட்டுள்ளார்கள்.