Sep 18

போதையில் விஷத்தை அருந்தியவர் சடலமாக மீட்பு


மட்டக்களப்பு ஏறாவூர் ஜயங்கேணி கிருஸ்ணகோவில் வீதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (18) மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். 

கணபதி கிராமத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளியான 48 வயதுடைய காந்தலிங்கம் உதயகுமார் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

குடும்ப தகராறு காரணமான மனைவி பிள்ளைகளை விட்டு பிரிந்து அவரது தாயுடன் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுகின்றது. 

மதுபோதையுடன் விஷத்தை குடித்ததால் அவர் உயிரிழந்திருப்பதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்