Sep 18

ஹாலிஎல நகரத்தின் சில இடங்களில் அதிர்வு


பதுளை, ஹாலிஎல நகரத்தில் சில இடங்களில் நிலத்தில் அதிர்வு உணரப்பட்டதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். 

இன்று பகல் 12.30 மணியளவில் பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையங்களிலும் அதிர்வு உணரப்பட்டதாக வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்கள் தெரிவித்தனர். 

எவ்வாறாயினும் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியக ஆய்வு மையத்திடம் நாம் வினவியபோது அவ்வாறான அதிர்வுகள் இடம்பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.