Mar 17

மைத்திரி - ரணில் இன்று ரகசியப் பேச்சு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இன்று வெள்ளிக்கிழமை காலை ஜனாதிபதி மாளிகையில் இரகசியப் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்படவுள்ள பிரேரணை உட்பட முக்கியமான சில விடயங்கள் இதன்போது ஆராயப்பட்டிருக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.