Jun 12

நாங்க யாருக்கு என்ன துரோகம் செய்தோம்; எங்களுக்கு மட்டும் ஏன்? துவண்டு போன டி வில்லியர்ஸ்...!

தொடர் தோல்விகளால் மிகவும் நொந்து போனதாக தென் ஆப்ரிக்க அணியின் கேப்டர் தெரிவித்துள்ளார்.

சாம்பியன்ஸ் லீக் தொடரின் அரையிறுதிக்கு முந்தைய போட்டியில், தென் ஆப்ரிக்கா அணி இந்தியாவை எதிர்கொண்டது. இரண்டு அணிகளுக்கும் வாழ்வா? சாவா? என்ற நிலையில் போட்டி நடைபெற்றது. அதில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதனால் தென் ஆப்ரிக்கா அணி தொடரில் இருந்து வெளியேறியது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டன் டி வில்லியர்ஸ், தங்கள் அணி வலுவான பேட்டிங் வரிசையுடன் இருப்பதாக கூறினார்.அனைத்து திறமைகள் இருந்தும், கடுமையான நெட் பயிற்சி எடுத்துக் கொண்டும் தோல்வியை மட்டும் தவிர்க்க முடியவில்லை.

இதற்கிடையில் தான் கேப்டன் பதவியில் இருந்து விலகும் எண்ணம் இல்லை என்றும், வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தன் தலைமையில் களமிறங்க பயிற்சி மேற்கொள்வோம் என்றும் தெரிவித்தார்.