Jun 12

சிறுவர் நலக்கொடுப்பனவை அதிகரிக்குமாறு கோரும் வறுமைக்கெதிரான கூட்டணி

வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு வழங்கப்படும் சிறுவர் நலக்கொடுப்பனவை அதிகரிக்குமாறு வறுமைக்கு எதிரான அமைப்புக்களின் தேசியக் கூட்டணி, மத்திய அரசைக் கோரியுள்ளது. இந்நடவடிக்கை மூலம் இத்தசாப்தத்தின் இறுதியில் சிறுவர்  வறுமையை அரைவாசியாகக் குறைக்க முடியும் என இவ்வமைப்பின் தேசிய இணைப்பாளர் அனித்தா கன்னா தெரிவித்துள்ளார். 

குறைவான வருமானம் பெறும் குடும்பங்கள் அதிகளவான பணத்தைச் சேமிக்கும் வண்ணம் சில சட்டமாற்றங்களைச் செய்யுமாறு அவ்வமைப்பு அரசைக் கோரியுள்ளது. மேலும் சிறுவர் நலக்கொடுப்பனவானது வாழ்க்கைச்செலவு அதிகரிப்புக்கு ஏற்றவகையில் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும், இத்தகைய அதிகரிப்பு கடந்த காலத்திற்கும் கொடுக்கப்பட வேண்டும் எனவும் இவ்வமைப்பு வலியுறுத்துகிறது.

அரசாங்கம் சிறுவர் நலக்கொடுப்பனவுக்காக ஏறத்தாழ $ 23 பில்லியன் செலவு செய்கிறது. இந்தக் கோரிக்கை அரசால் ஏற்றுக்கொள்ளப்படுமிடத்து ஒரு ஆண்டுக்கு  $ 2300 அளவான தொகையை ஒவ்வொரு குடும்பமும் மேலதிகமாகப் பெற்றுக்கொள்ளும்.