Jun 11

சம்பியன் தொடர்; அரை இறுதியில் இந்தியா

சாம்பியன்ஸ்  கிண்ணத் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறுவது யார் என்பதை நிர்ணயிக்கும் போட்டியில் இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின. 

நாணயச்சுழற்சியில் வென்ற இந்திய அணி தலைவர் விராட் கோலி களத்தடுப்பை  தெரிவு செய்தார். இந்திய அணியில் அஸ்வின் சேர்க்கப்பட்டிருந்தார்.

முதலில் களம் இறங்கிய தென்ஆப்பிரிக்கவின் துடுப்பாட்ட வீரர்கள் இந்தியாவின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 44.3 ஓவரில் 191 ஓட்டங்களை மட்டுமே பெற்ற நிலையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்தனர். 

ஆரம்பத்துடப்பாட்ட வீரர் டி கொக் மட்டும் 53ஓட்டங்களைப் பெற்றார் புவனேஸ்வர் குமார், பும்ப்ரா தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

பின்னர் 192 ஓட்டங்கள்  எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியாவின் தவான், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 

ரோகித் சர்மா (12) எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து தவான் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார்.  

தவான் 83 பந்தில் 12 பவுண்டரி, 1 சிக்சருடன் 78ஓட்டங்களைச் சேர்த்து ஆட்டம் இழந்தார். தவான் கோலிஜோடி 2ஆவது விக்கெட்டுக்கு 128ஓட்டங்களைச் சேர்த்தது.

38ஆவது ஓவரின் கடைசி பந்தை யுவராஜ் சிங் சிக்சருக்கு தூக்க இந்தியா 38 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 193 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

விராட் கோலி 101 பந்தில் 7 பவுண்டரி, 1 சிக்சருடன் 76 ஓட்டங்கள் எடுத்தும், யுவராஜ் சிங் 25 பந்தில் 23 ஓட்டங்கள் எடுத்தும் களத்தில் இருந்தனர்.இந்த வெற்றியின் மூலம் 'பி' பிரிவில் இருந்து இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.