Sep 14

கைவிடப்பட்ட நாரைகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் மிருக காட்சிசாலை

செக் நாட்டின் பிரகா நகரிலுள்ள செந்நாரை குஞ்சுகள் அந்நகரத்திலுள்ள மிருகக் காட்சிசாலையினை வந்தடைய பழகியுள்ளன.

பிறந்து 18-30 நாட்கள் மட்டுமே ஆன செந்நாரைக் குஞ்சிகள் சில அவற்றின் தாய் பறவையினால் கைவிடப்பட்டுள்ளன.

குறித்த அநாதரவான செந்நாரைக் குஞ்சுகள் பிரகா நகர மிருகக் காட்சி சாலையினால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

புதிதாக மிருகக் காட்சிசாலைக்கு வருகை தந்துள்ள குஞ்சுகளை அச்சூழலுக்கு பழக்கப்படுத்துவதற்காக, ஏற்கனவே காத்துவரும் நாரைகளுடன் சேர்க்காமல் மிருகக் காட்சி சாலையில் கூண்டை விட்டு வெளியில் நடக்க விடப்படுகின்றன.

இவ்வாறாக குறித்த இடத்தில் நடந்து திரிந்து அப்பகுதியியை நன்கு பரீட்சியமானதாக அவை உணர்ந்த பின்னரே முன்னமே கூண்டில் வளர்ந்து வரும் நாரைக் கூட்டங்களுடன் சேர்க்கப்படுகின்றன.