Sep 14

பரிஸ் ஈஃபில் கோபுரத்தில் வெளிச்சத் திரையிடல்!

ஜப்பான் நாட்டு முடிக்குரிய இளவரசர் நரூஹிடோவின் பிரான்ஸிற்கான விஜயத்தினை முன்னிட்டு அந்நாட்டின் தலைநகர் பரிஸிலுள்ள ஈஃபில் கோபுரத்தில் வெளிச்சத் திரையிடல் நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.

ஜப்பான்-பிரான்ஸ் நாடுகளுக்கிடையிலான 160 ஆண்டுகால சிறந்த நட்புறவை போற்றும் வகையில்  ஜப்பான் முடிக்குரிய இளவரசர்  நரூஹிடோவின் இந்த ஒருவார உத்தியோகபூர்வ  விஜயம் அமைந்துள்ளது.

அவரது விஜயத்தை சிறப்பிக்கும் வகையில் நேற்று (வியாழக்கிழமை) இரவு பரிஸின் ஈஃபில் கோபுரத்தில் வெளிச்சத் திரையிடல் மேற்கொள்ளபட்டுள்ளது.

இவ்விஜயத்தில் இருதரப்பு உறவுகளைப் மேலும் பலப்படுத்துவது தொடர்பாக இருதரப்பிற்கும் இடையே  கலந்துரையாடப்படவுள்ளது.

பரிஸின் வெளிச்ச வடிவமைப்பில் தேர்ச்சி பெற்றவர்களான மொடோகோ, இஷீ ஆகியோாினால் சுதந்திரம், அழகு, பல்வகைமை என மூன்று தொனிப்பொருட்களை மையமாகக் கொண்டு குறித்த வெளிச்ச நிகழ்வு வடிவமைக்கபபட்டுள்ளது.

மேலும், குறித்த வெளிச்சத் திரையிடலில் ஜப்பானுடைய கொடியும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.