Sep 14

பொகவந்தலாவை பிரதேசத்தை உலுக்கிய தற்கொலை


மனைவியுடன் ஏற்பட்ட தகராறு நீண்டதில் நபரொருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.பொகவந்தலாவை பிரிட்வெல் தோட்டத்தை சேர்ந்த 39 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தினமும் குடித்துவிட்டு வீடு வரும் இந்த நபர் மனைவியுடன் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதேபோல் , நேற்றிரவும் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ள நிலையில் இதனால் மனஉளைச்சலில் குறித்த நபர் இன்று காலை அவரது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சடலம் நீதவான் விசாரணைகளின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் பொகவந்தலாவை காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.