Sep 14

சீமராஜா இணையத்தில் வெளியானது எப்படி? அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன்.!

வருத்தப்படாத வாலிபர் சங்கம் தொடங்கி எதிர்நீச்சல், ரஜினி முருகன் ஆகிய திரைப்படங்களின் வெற்றியின் மூலம் தமிழ்த்திரையுலகில் தனக்கென தனியானதோர் ரசிகர் வட்டத்தினை பெற்றுள்ள நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் அவரது ஆஸ்தான இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நேற்றைய தினம் வெளியானது சீமராஜா திரைப்படம்.


முன்னோட்டங்களின் மூலம் ரசிகர்களின் எதிர்பார்ப்பினை உண்டாக்கியிருந்த சீமராஜா திரைப்படம், முதல் நாளில் சுமார் 10 கோடி அளவுக்கு வசூலித்ததாக திரைவட்டாரங்கள் கிசுகிசுத்த நிலையில் படக்குழுவுக்கு தற்போது ஓர் அதிர்ச்சி அளிக்கும் தகவல் கிட்டியுள்ளது.

தமிழ்ராக்கர்ஸ், தமிழ் கன், மெட்ராஸ் ராக்கர்கஸ் ஆகிய இணையதளங்களில் சீமராஜா திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளதால் அதிர்ச்சியில் உள்ளது படக்குழு.

முன்னதாக, சீமராஜா படத்தை இணையத்தில் வெளியிட தடை கோரி படத்தின் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து தடை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.