Sep 14

மலையக மக்களின் சம்பளப் பிரச்சினை

முதலாளிமார் சம்மேளனம் பெருந்தோட்ட மக்களின் சம்பள உயர்வு பிரச்சினை கோரிக்கைகளுக்கு எதிர்மாறான பதிலை தருமாயின் சம்பள உயர்வுப் பிரச்சினையில் அரசாங்கம் தலையீடு செய்வதற்கு அழுத்தங்களை பிரயோகிப்போம் என கல்வி  இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.பெருந்தோட்ட மக்களின் சம்பள உயர்வு பிரச்சினை குறித்து எதிர்வரும் 23 ஆம் திகதி மலையக மக்கள் மேற்கொள்ளவுள்ள ஆர்ப்பாட்டம் வெற்றியாகவே அமையும். 


மாறாக முதலாளிமார் சம்மேளனம் கோரிக்கைகளுக்கு எதிர்மாறான பதிலை தருமாயின் சம்பள உயர்வுப் பிரச்சினையில் அரசாங்கம் தலையீடு செய்வதற்கு அழுத்தங்களை பிரயோகிப்போம்.

மேலும் 1000 ருபாவுக்கு குறையாத நாட்சம்பளத்தை பெற்றுக்கொடுக்க முதலாளிமார் சம்மேளனம் ஒப்புக்கொள்ள வேண்டும். 

ஏனைய அரச திணைக்களங்களில் காணப்படும் சம்பள பிரச்சினைகளை ஆராய ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த ஆணைக்குழுவில் பெருந்தோட்ட மக்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பில் ஆராயப்பட வேண்டும் . 

பெருந்தோட்ட தனியார் கம்பனிகளுடனான மலையக மக்களின் போராட்டங்கள் கம்பனிகளுக்கு சார்பாக அமைகின்றன. கூட்டு ஒப்பந்தத்தை மேற்க்கொள்ளும் முதலாளிமார் சம்மேளனம் மற்றும் தொழில் சங்கங்கங்கள் இது தொடர்பில் கவனம் செலுத்துவதில்லை எனவும் குறிப்பிட்டார்.

பெருந்தோட்ட மக்களின் சம்பள பிரச்சினைக்கு அரசாங்கத்தின் அழுத்தம் எவ்வாறு இருக்கப்போகின்றது என்பது தொடர்பில் விளக்கமளிக்கும் போதே அவர் மேற்க்கண்டவாறு குறிப்பிட்டார்.