Sep 14

விபத்தில் 13 மாணவர்கள் காயமடைந்தமை தொடர்பில் பேருந்தின் சாரதி கைது!

உயர்நிலை பள்ளி மாணவர்கள் சென்ற பேருந்து ஒன்று வாகனம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.


Innisfil பகுதியில் 4 வது வீதி மற்றும் Sideroad 5 ஆகியவற்றில்  காலை சுமார் 8:10 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மேலும் இந்த விபத்தில் படுகாயமுற்ற மாணவன் ஒருவன் உலங்கு வானூர்தி உதவியுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டன.

மிகுதி மாணவர்களுக்கு சிறு காயமே ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார் ஒன்றாரியோவை சேர்ந்த 73 வயதுடையவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் அவரை எதிர்வரும் நவம்பர் மாதம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.