Feb 25

தொல்காப்பியர் தமிழ் சங்க விருது பெற்ற கனடா தமிழ் கல்லூரி

தமிழ்நாடு எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகம் வழங்கும் தொல்காப்பியர் தமிழ்ச் சங்க விருது இவ்வாண்டு கனடா தமிழ் கல்லூரித் தலைவர் வி.சு.துரைராசாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த முப்பது ஆண்டு காலமாகக் கனடாவில் இளம் தலைமுறையினரிடையே தமிழ்மொழியை நிலைபெறச் செய்ய கனடா தமிழ் கல்லூரி ஆற்றிவரும் பணியை பாராட்டியே இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.


இவ்விருதுடன், தமிழ் வளர்ச்சிக்காக ஒரு லட்சம் இந்திய ரூபா பரிசுத் தொகையாகவும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.