Sep 13

மல்லையாவை சந்தித்த ஜெட்லி பதவி விலக வேண்டும்: ராகுல்

மல்லையாவை ஜெட்லி சந்தித்த குற்றத்திற்கு தார்மீக பொறுப்பேற்று ஜெட்லி பதவி விலக வேண்டும் என காங்.தலைவர் ராகுல் கூறினார்.

இந்திய வங்கிகளில் ரூ. 9 ஆயிரம் கோடி கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாததால் தேடப்பட்டுவரும் குற்றவாளியான மல்லையா லண்டன் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த போது, செய்தியாளர்களிடம் கூறியது, ஜெனிவாவில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க வேண்டியது இருந்தது,

இந்தியாவை விட்டு புறப்படும் முன்னதாக நிதியமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்து பேசினேன். வங்கி கடன்களை திருப்பி செலுத்துகிறேன் என தெரிவித்தேன் என்று கூறி இருந்தார். இவ்வாறு அவர் கூறினார். இதற்கு ஜெட்லி மறுப்பு கூறினார்.

இது குறித்து காங். தலைவர் ராகுல் டுவுிட்டரில் கூறியது, ஜெட்லி, மல்லையாவை சந்தித்தது குறித்து பிரதமர் மோடி உரிய விசாரணைக்கு .உத்தரவிட வேண்டும். அதுவரை ஜெட்லி தார்மீக பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இ்வ்வாறு ராகுல் கூறியுள்ளார்.