Sep 13

பாவம் செய்தால் மட்டும் பாவமல்ல பாவம் செய்வதைப் பார்த்துக் கொண்டிருப்பதும் பாவம்

என்றோ தொடங்கிய சத்திய சோதனை இன்னமும் முடியவில்லையா? என நாம் அனைவரும் எண்ணும்அளவிற்கு எமது அரசியல் முன்னேற்றம் இருப்பது கண்டு வருந்தாத தமிழர் எவருமே இருக்கமுடியாது. இது இலங்கையில் இருந்து உலகெலாம் பரவி வரும் ஏக்கத்தின் அடிப்படையில் உருவானதே.

இலங்கை இதில் முதலிடம் வகித்தாலும்  கனடாவின் அரசியல் சூழ்நிலை எந்த விதத்திலும்குறைந்ததல்ல. இதற்குக் காரணம் மழை வரும் போது முளைக்கும் காளான்கள் போல் தேர்தல்கள்வரும் போது முளைக்கும் அரசியல் வாதிகளே.

ஸ்காபுறோ றூச்றிவர் தொகுதியின் மாகாணசபை இடைத்தேர்தலில் நீதன் சாண்ணும்ரூபவ் பிரகல்திருவும் போட்டியில் நின்ற தமிழ் வாக்காளர்களைப் பிரித்து  பத்து ஹொறியன் குடும்பம்கூட இல்லாத அத்தொகுதியில் ஷஷறோமன் ஷh|| வென்றதை எம்மால் தடுக்க முடிந்ததா?

நாம் பிறந்த காலம் தொட்டு இறக்கும் காலம் வரை வாழ்வியலில் அரசியலோடு பின்னிப்பிணைந்து வாழ்பவர்கள். ஷஷஅரசியல் எமக்குப் புதிதல்ல|| ஒரு முறை ஏமாந்து போனதுஉண்மைதான். ஆனால் றூச்றிவர் தொகுதியில் நாம் கற்ற பாடம் எமது மக்களின் மனதை விட்டுஅகலவில்லை. அகலவும் மாட்டாது. இதன் எதிரொலிதான் லோகன் கணபதியின் பழமைவாதக் கட்சிஅபேட்சகர் தேர்விலும்ரூபவ் மாகாண சபைத் தேர்தலிலும் எமக்குக் கிடைத்த அமோக வெற்றி.

தமிழர்களை ஏமாற்றி நல்லவர்களைத் தோற்கடிக்க முயன்ற இந்தத் தீயசக்திகளுக்குக் கிடைத்தநல்லதோர் பாடம். இவர்கள் ஒரு போதும் திருந்த மாட்டார்கள். மக்கள் தான் இவர்களை தூர வைத்துத்திருத்த வேண்டும்.

நான்கு நாஸ்திரியர்களுக்காக உலகெல்லாம் உள்ள கோயில்களை இடிப்பது அல்லது அழிப்பதுமுறையா? அல்லது சரியா?

இன்று மார்க்கம் மாநகர சபையில் 7ம் வட்டாரக் கவுண்சிலருக்கான போட்டியில் என்னநடக்கின்றது என்று தெரியுமா? அங்கு போட்டியிடும் பட்டியலைப் பார்த்தால் உங்களுக்கேஉண்மை விளங்கும். திறமை மிக்க தமிழர் ஒருவரைத் தேர்வு செய்ய வேண்டிய இடத்தில் ஐந்துதமிழர்கள் போட்டியிடுவது எமக்கு நன்மை தருமா? ஷறூச்றிவர்| தோல்வியை இது நினைவூட்டவில்லையா?

கனேடிய பட்டதாரியான கீர்த்திகா லோகன் மற்றைய வேட்பாளர்கள் போல் விளம்பரம் தேடும்வேட்பாளரல்ல. வெற்றியென்பதையும் தாண்டி விளம்பரம் தேடும் வேட்பாளர்கள் வெற்றிபெறப் போவதில்லை. விளம்பரம் மட்டும் வெற்றியல்ல.

வேண்டுமானால் கீர்த்திகா லோகன்ஒரு ஸ்தாபனத்தின் அதிபதியாகவோ அல்லது தலைமை முகாமையாளராகவோ ஐந்து வருடத்தில்வரமுடியும். இதில் போட்டியிடும் ஏனையவர்களிடம் இதற்கான தகுதியும்  திறமையும்  பண்பும்உண்டா என நீங்களே அறிந்து கொள்வது தான் சிறந்தது.

ஆனால் கீர்த்திகா லோகன் தமதுஉயர்விற்கும்  பதவிக்கும் முதலிடம் கொடுக்காது மக்களுக்குச் சேவை செய்வதை மேன்மையாக எடுத்ததுகண்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன்.

அரசியல் பாடத்தைத் தன் பட்டப்படிப்பில் இணைத்தமை அவரின் சேவை மனப்பான்மையை எடுத்துக் காட்டவில்லையா? மனிதத்தையும்  மனிதாபிமானத்தையும் மதிக்கும் இவர்ரூபவ் தந்தை லோகன் கணபதியைப்போல் இவரும் இருப்பது கண்டு நாம் பெருமைப்பட வேண்டும்.

லோகன் அவர்கள் அவசரப்பட்டு தனது மகளை அரசியலுக்குக் கொண்டு வந்து விட்டார் எனச் சிலர்கூறியது கேட்டு வேதனைப்பட்டேன். நான் தமிழர் அரசியலில் நீண்ட கால அக்கறை உள்ளவன்என்றபடியால் இதற்கான உண்மையைக் கூற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன்.

கீர்த்திகா லோகனையும் அவரது தாய் தந்தை  சகோதரர்களையும் நன்றாக அறிந்தவன் நான்.சேவை மனப்பான்மை கொண்ட அந்தக் குடும்பத்தில் பிறந்த கீர்த்திகா தானும் அதே பாதையைத்தேர்ந்தெடுத்ததில் என்ன தவறு? ஏன் இந்த உலகில் எட்டு வயதில் கூட நாட்டை ஆண்ட அரசர்கள்இருந்தும்  25 வயதான கீர்த்திகா லோகன் தேர்தலில் நிற்பது சிலரால் சகிக்கமுடியவில்லையா?

என் அன்பான உறவுகளே தீயவர்களை அழித்து நல்லவர்களை வாழ்த்தி திறமைமிக்கவர்களைத் தேர்வுசெய்து எம் சமுதாயத்திற்குப் பெருமையை எடுத்துக்காட்ட வேண்டியது எமது கடமையல்லவா? ஷஷபாவம்செய்தால் மட்டும் பாவமாகாது. பாவம் செய்வதைப் பார்த்துக் கொண்டிருப்பதும் பாவமே||.

அறிவும்  ஆற்றலும்  தகுதியும்  தகைமையும் கொண்ட கீர்த்திகா லோகனுக்க வாழ்வளித்து அவரைமார்க்கம் கவுண்சிலராகத் தேர்வு செய்வது 7ம் வட்டார வாக்களார்களிடம் அன்போடு; உரிமையோடும் கேட்டுக் கொள்கின்றேன். வேறு யாரிடம் நான் கேட்க முடியும்.

நன்றி.