Sep 12

ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன் அணிக்கு விமான நிலையத்தில் மகத்தான வரவேற்பு

ஆசிய வலைப்பந்தாட்ட போட்டியில் சம்பியன் பட்டம் வென்ற இலங்கை அணி நேற்று அதிகாலை நாடு திரும்பியது.அவ்வணி வீராங்கனைகளுக்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது.

உள்ளூராட்சி மாகாண சபைகள் மற்றும் வினையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா அணித்தலைவியை வரவேற்ற பின்னர் அணி வீரர்களுடன் இணைந்து எடுத்துக் கொண்ட படம். இலங்கை அணி 9 வருடங்களின் பின்னர் இந்த ஆசிய வலைப்பந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்று கிண்ணத்தை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணி சிங்கப்பூர் அணியை 69-−50 புள்ளிகள் அடிப்படையில் வென்றது. அத்துடன் அடுத்த ஆண்டு இங்கிலாந்தின் லிவர் பூல் நகரில் உலகக்கிண்ண வலைப்பந்தாட்ட போட்டிக்கு தகுதி பெற்றது. போட்டியை நடத்திய சிங்கப்பூர் அணியும் உலகக்கிண்ண போட்டிக்கு தெரிவானது.