Sep 11

சொந்த மகள்மாரை கடத்திய தாய் குற்றத்தை ஒப்புக்கொண்டார்!

பிரித்தானியாவில் தமது இரு மகள்மாரை கடத்தி அலாஸ்காவிற்கு கொண்டு சென்ற தாயொருவர், தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

பிரித்தானியாவின் கென்ட் பிராந்தியத்திலுள்ள மெயிட்ஸ்டோன் நகரில் வாழ்ந்த இன்டியா ஃபோட் (வயது-34), தனது புதிய அமெரிக்க கணவர் வாழும் இடத்திற்கு தனது இரு பெண் பிள்ளைகளையும் அவர்களுடைய பிறப்புத் தந்தையின் அனுமதியின்றி 2015 ஆம் ஆண்டு கடத்திச் சென்றதாக குற்றஞ்சாட்டப்பட்டு வழக்குத் தொடரப்பட்டது.

இந்நிலையில், குறித்த குற்றச்சாட்டினை இன்டியா ஃபோட் இஸ்லேவேர்த் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.

குறித்த குற்றத்திற்காக அவர் கடந்த மூன்றரை வருட காலமாக சிறைத்தண்டனை அனுபவித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.