Sep 11

பொலிஸார் மீது கல்லெறி தாக்குதல்

நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒருவரை கைதுசெய்வதற்காக சென்ற அரலகன்வில பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் மீது கல்லெறி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு பொலிஸார் மீது கல்லெறி தாக்குதலை நடத்திய நபர் தப்பிச் சென்றுள்ளதாகவும் அவரை கைதுசெய்ய விசேட பொலிஸ் குழுவொன்று தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் அரலகன்வில பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

கல்லெறி தாக்குதலுக்கிலக்கான பொலிஸ் அதிகாரிகள் இருவரும் தெஹியத்தகண்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.