Jun 10

இங்கிலாந்தை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் அவுஸ்திரேலியா இன்று மோதல்

ஐ.சி.சி. சம்­பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இன்­றைய போட்­டியில் இங்­கி­லாந்தை வென்­றாக வேண்­டிய கட்­டா­யத்தில் கள­மி­றங்­கு­கி­றது அவுஸ்­தி­ரே­லியா. அதே­நே­ரத்தில் அரை­யி­று­திக்கு முன்­னே­றி­விட்ட நிலையில் அவுஸ்­தி­ரே­லி­யாவை வீழ்த்திவிட வேண்டும் என்­பதில் இங்­கி­லாந்து அணியும் தீவி­ர­மாக இருக்­கி­றது. 

இத்­தொ­டரில் அவுஸ்­தி­ரே­லிய அணி நியூ­ஸி­லாந்து மற்றும் பங்­க­ளாதேஷ் அணி­களை எதிர்­கொண்­டது. 

ஆனால் இந்த இரு போட்­டி­களின் போதும் மழை தொடர்ந்து குறுக்­கிட்டு ஆஸி.யை சோதித்­தது. இதனால் அவுஸ்­தி­ரே­லியாவுக்கு இரு போட்­டிகள் மூலம் தலா ஒரு புள்­ளிதான் கிடைத்­தது. அதே­நே­ரத்தில் 'ஏ' பிரிவில் உள்ள இங்­கி­லாந்து அணியோ தொடக்க ஆட்­டத்தில் பங்­க­ளா­தேஷை வீழ்த்­தி­யது. 

நியூ­சி­லாந்து அணியை 87 ஓட்­டங்கள் வித்­தி­யா­சத்தில் வீழ்த்தி வெற்­றி­க­ர­மாக அரை­யி­று­திக்கு அடி­யெ­டுத்து வைத்­துள்­ளது. 

தற்­போது இங்­கி­லாந்து அணியை வென்­றால்தான் தொடரில் நீடிக்க முடியும் என்ற இக்கட்டான நிலையில் அவுஸ்­தி­ரே­லியா உள்­ளது. 

இல்­லை­யெனில் தொட­ரை­விட்டு வெளி­யேற வேண்­டிய நிலையில் இருக்­கி­றது அவுஸ்­தி­ரே­லியா. 

இது தொடர்­பாக கருத்து தெரி­வித்த அவுஸ்­தி­ரே­லிய முன்னாள் வீரர் ஹஸி, இரு அணி­க­ளுக்கும் இடை­யே­யான போட்டி எப்­போதும் கடு­மை­யா­ன­தா­கத்தான் இருக்கும். இன்றைய போட்டியில் இங்கிலாந்து வெல்ல சாத்தியங்கள் அதிகம் இருக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.