Sep 10

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை- ரோஹண லக்ஷ்மன்

பொது எதிரணியினரால் கடந்த ஐந்தாம் திகதி கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.


கொழும்பில் கடந்தவாரம் பொது எதிரணியினரால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் சிலர் கலந்துகொண்டிருந்தமை தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இது தொடர்பில் தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,

அரசாங்கத்திற்கு எதிராகவே கூட்டு எதிர்க்கட்சியினர் அன்று ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 

அதில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டமை நியாயமற்ற விடயமாகும். 

அரசாங்கத்தில் இருந்து விலகிய 16 பேரும் பாராளுமன்றத்தில் பொது எதிரணியுடன் அமர்ந்தாலும் இன்னும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களாகவே காணப்படுகின்றனர் என்றார்.