Sep 10

பிக் பாஸ் ஏன் ஐஸ்வர்யாவை காப்பாற்றினார்?: உண்மையை போட்டுடைத்த காஜல்

பிக் பாஸ் ஏன் ஐஸ்வர்யாவை காப்பாற்றினார் என்று முன்னாள் போட்டியாளரான காஜல் பசுபதி விளக்கம் அளித்துள்ளார்.

பிக் பாஸ் 2 வீட்டில் இருக்கும் ஐஸ்வர்யாவை வெளியேற்றவே பார்வையாளர்கள் வாக்களித்தனர். ஆனால் பார்வையாளர்கள் ஐஸ்வர்யாவை காப்பாற்ற வாக்களித்ததாக போலி கணக்கு காட்டி அவரை காப்பாற்றிவிட்டார் பிக் பாஸ்.

இந்நிலையில் இது குறித்து முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான காஜல் பசுபதி ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.கமல் சார் நிகழ்ச்சியை நடத்துபவர் அவ்வளவு தான். அவரை குறை சொல்லக் கூடாது. கமல் என்ன பேச வேண்டும் என்பதை அந்த நிகழ்ச்சியின் டைரக்டர் முடிவு செய்கிறார். டிஆர்பிக்காக ஐஸ்வர்யா வேண்டும் என்று டைரக்டர் விரும்புகிறார்.

அவ்வளவு தான் என்று காஜல் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.ஐஸ்வர்யாவுக்கு மக்கள் போட்ட ஓட்டு என்று கமல் காட்டிய ஆதாரத்தை நம்ப யாரும் தயாராக இல்லை. இந்நிலையில் பிக் பாஸ் அணியை வைத்து அவர்களே கூட ஓட்டு போடலாம். கம்ப்யூட்டர் ஸ்க்ரிப்ட்டை வைத்தும் மாற்றலாம். இது மக்கள் போட்ட ஓட்டு அல்ல என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் காஜல்.

ஐஸ்வர்யாவுக்கு கிடைத்த ஓட்டுகள் என்று கூறி கமல் காட்டிய கிராப் போலி என்கிறார்கள் பார்வையாளர்கள். அதை ஆமோதித்துள்ளார் காஜல். இது போன்று ஒரு நிமிடத்தில் போட்டோஷாப் செய்யலாம் என்கிறார் அவர். நிகழ்ச்சியின் டைரக்டர் எது சொன்னாலும் கமல் ஹாஸன் அப்படியே நம்பி விடுவாரா?

பிக் பாஸ் ஷோ இயக்குனர் என்ன சொன்னாலும் அதை ஏன் என்று கேட்காமல் அப்படியே பேசுவாரா கமல். அரசியலில் இருக்கும் ஒருவர் இப்படி நடந்து கொள்வது சரியா என்ற கேள்வி எழுந்துள்ளது.