Sep 10

இலங்கை அகதிக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்!

இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு அகதியாக சென்ற பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பிரசவித்துள்ளார்.


ஈரோடு மாவட்டம் அறச்சலூரிலுள்ள இலங்கை அகதி முகாமை சேர்ந்தவர் விஜயகுமார் அதே பகுதியை சேர்ந்த கலானி என்பவரை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

இந்தநிலையில் கர்ப்பம் தரித்த கலானியை விஜயகுமார் சென்னிமலையிலுள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் அனுமதித்தார்.

அங்கு கலானிக்கு அழகான 4 குழந்தைகள் பிறந்தன.

இதுகுறித்து கலானியின் உறவினர் ஒருவர் கூறும்போது, “கலானிக்கு 2 ஆண் குழந்தையும், 2 பெண் குழந்தையும் பிறந்துள்ளன. எங்களது உறவினர்களில் சிலருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன.

ஆனால் 4 குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிறந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது”, என கூறியுள்ளார்.