Sep 10

ரொறொன்ரோவில் பூக்கத் தயாராகும் அரிய வகை பூ

அரிதான ஒருவகை இந்தோனேசிய செடியான அமொர்ஃபோபல்லஸ் ரிரனம் எனப்படும் கிளைகள் இல்லாத செடியில் பூக்கும் பூ, மனித சடலத்திலிருந்து வெளியேறும் துர்நாற்றம் கொண்டது.

இந்த அரிய வகைப் பூ, ரொறொன்ரோ பெரும்பாகத்தில் முதல் தடவையாக அடுத்த வாரம் பூக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த வெப்ப மண்டல செடியானது முதல் தடவையாக மலர்வதற்கு ஏழு முதல் 10 வருடங்கள் வளர வேண்டுமென கூறப்பட்டுள்ளது.

மிகவும் விசேடமான இப்பூவை காண்பதற்கு அனைவரும் ஆர்வமுடன் உள்ளனர். இந்த மரம் மகரந்த சேர்க்கைக்கு வண்டுகள் மற்றும் ஈக்களை சார்ந்திருக்கும்.

இந்தப் பூக்கள் சாதாரண பூக்கள் போன்றவை அல்ல. இரத்தச் சிவப்பு வடிவமைப்பு கொண்டவை. இந்தநிலையில் மிகவும் அரியவகையான இந்தப் பூவை பார்ப்பதற்காக ஏராளமானவர்கள் வருவார்களென எதிர்பார்க்கப்படுகின்றது.