Sep 10

பாதுகாப்பு அமைச்சு மீதான விமர்சனங்களுக்கு இலங்கை இராணுவம் கண்டனம்!

பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவ தலைமைத்துவம் விமர்சிக்கப்படுவது தொடர்பில் இலங்கை இராணுவம் கண்டனம் வெளியிட்டுள்ளது.


இராணுவத் தலைமையகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.

அரசியல் மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக ​தேசிய பாதுகாப்பை அடிப்படையாக வைத்து, பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவ தலைமைத்துவம் விமர்சிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் தாம் திருப்தியடைவதில்லை என ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் சிலர் அண்மையில் தெரிவித்திருந்தனர்.

இந்தநிலையில், ஓய்வுபெற்று பல வருடங்கள் கடந்த பின்னர், இராணுவ பலம் தொடர்பில் மீளாய்வு செய்வதற்கு எவருக்கும் உரிமை இல்லையென இராணுவத் தலைமையகம் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும், தேவையான சந்தர்ப்பங்களில் முன்னாள் இராணுவத் தளபதிகள் மற்றும் ஓய்வுபெற்ற சிரேஷ்ட அதிகாரிகளிடம் கருத்துக்களைப் பரிமாறி இராணுவத்தை பலப்படுத்துவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.