Sep 10

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை வியட்நாமிற்கு விஜயம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க வியட்நாமிற்கு விஜயம் செய்யவுள்ளார்.


வியட்நாமின் ஹெனேய் நகரில் இடம்பெறவுள்ள உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்வதற்காகவே நாளை(திங்கட்கிழமை) பிரதமர் அங்கு விஜயம் செய்யவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஆசிய அமைப்புக்களுடன் தொடர்புடைய நாடுகளிலிருந்தும், ஏனைய நாடுகள் பலவற்றிலிருந்தும் உயர் மட்ட பிரதிநிதிகள் பலர் இந்ந மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது ஆசிய அமைப்புக்களுடன் தொடர்புடைய நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.