Sep 08

தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் நினைவாக அருங்காட்சியகம்!

தாக்குதல்களில் காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் நினைவாக அருங்காட்சியகம் ஒன்று பரிசில் திறந்து வைக்கப்படவுள்ளது.

பிரான்சில் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற தாக்குதல்களின் தொகுப்பாகவும், நினைவிடமாகவும் ஆராய்ச்சிகளுக்கான கூடமாகவும் இது அமைந்துள்ளது.

Ile de la Cité இல் அமைந்துள்ள முன்னாள் பரிஸ் நீதிமன்றத்தில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்படவுள்ளது.

இதுதொடர்பிலான அறிவிப்பினை நேற்று(வெள்ளிக்கிழமை) நீதித்துறை அமைச்சர் Nicole Belloubet வெளியிட்டுள்ளார்.

இங்கு செப்டம்பர் 197ஆம் ஆண்டு Drugstore Saint-Germain இல் இடம்பெற்ற தாக்குதலில் இருந்து, அதன் பின்னரான அனைத்து தாக்குதல்களிலும் உயிரிழந்தவர்கள் தொடர்பிலான தகவல்கள் இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்படவுள்ளன.

அஞ்சலி செலுத்தும் இடமாகவும், வரலாற்றுகளை பேணவும் இந்த அருங்காட்சியகம் உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.