Sep 08

பெண்களை இழிவுபடுத்தும் செயலில் ஈடுபட்ட மாணவன் கைது.!


பெங்களூர் பரப்பன அக்ரஹாரா காவல் நிலைய எல்லை பகுதியில் உள்ளது சூடசந்திரா என்ற பகுதி.தமிழகத்தை சேர்ந்த பெங்களூர் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் ஒருவர் சக மாணவிகள், அவர்கள் தாய் குளிக்கும் வீடியோவை பேஸ்புக்கில் அப்லோடு செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

இங்குள்ள தனியார் பொறியில் கல்லூரியில் படித்து வருபவர் சித்தார்த் (21).

தமிழகத்தின் தஞ்சாவூரை பூர்வீகமாக கொண்ட சித்தார்த் பெங்களூரில் தங்கியிருந்து படித்து வந்தார்.

ஆனால் படிப்போடு சேர்த்து சில்மிஷ வேலைகளையும் ஆரம்பித்துள்ளார் சித்தார்த்.

உடன் படிக்கும் ஒரு மாணவியுடன் நெருக்கம் வளர்த்துக் கொண்ட சித்தார்த் அவரை வைத்து கொடூரமான செயல்களில் இறங்கிவிட்டார்.

அதாவது தன்னுடன் படிக்கும் மாணவிகள் தங்கியுள்ள ஹாஸ்டல் அறைகளில் செல்போன் கேமராவை வைத்து அவர்கள் குளிக்கும் காட்சிகளை உடை மாற்றும் காட்சிகளை வீடியோவாக எடுத்து பேஸ்புக்கில் அப்லோடு செய்துள்ளார் சித்தார்த்.

லேடீஸ் ஹாஸ்டலில் இவர  செல்போனை வைத்து வீடியோ எடுப்பதற்கு அவரது தோழி உதவி செய்துள்ளார்.

அவரும் ஹாஸ்டலில் தங்கியிருந்துதான் படிக்கிறார்.

பெண் என்றும் பாராமல் சக மாணவிகள் குளிப்பதை வீடியோ எடுத்தது சித்தார்த்தின் தோழிதான்.

அந்த வீடியோவை சித்தார்த்திற்கு அவர் அனுப்புவது வழக்கமாம்.