Sep 08

பிரான்சில் யாழ் தமிழருக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்; ஆபிரிக்கர்கள் அடாவடி!

பிரான்சில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை 4 பேர் கொண்ட கும்பல் தாக்கியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது,


பிரான்ஸ்சில் தொலைபேசிகள் விற்கும் கடை வைத்திருப்பவர் செந்தூரன் இவர் நேற்று முன்தினம் இரவு கடையில் வியாபாரம் செய்து விட்டு கடையை பூட்டி விட்டு தனியாக வீதியில் சென்றுள்ளார்,

அப்போது அப்பகுதியில் இருந்த ஆபிரிக்கர்கள் குறித்த இளைஞனை நோக்கி வந்துள்ளனர், இவர்களை பார்த்து ஓட ஆரம்பித்த செந்தூரனை சுற்றிவளைத்து அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலி மற்றும் அவரது பணப்பை ஆகியவற்றை பறிக்க முற்பட்ட போது குறித்த தமிழ் இளைஞர் தடுக்க போராடினார்.

இதனால் இரு தரப்புக்களிடையும் கைகலப்பு ஏற்பட்டதில் தமிழ் இளைஞரை கடுமையாக தாக்கிவிட்டு தங்கச்சங்கிலி மற்றும் பணப்பையை, தொலைபேசி என்பவற்றை திருடி சென்றனர் ஆப்பிரிக்கர்கள்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.