Sep 08

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு அரசியல் அமைப்பு சபை முக்கிய அறிவிப்பு

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கும் பொலிஸ்மா அதிபருக்குமிடையில் நிலவும் தீர்க்கப்படாத பிரச்சினைகளை 14 நாட்களுக்குள் தீர்த்துக்கொள்ளுமாறு அரசியலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

 தேசிய பொலிஸ் ஆணைக்குழுவும் பொலிஸ்மா அதிபரும் அரசியலமைப்பு சபையில் முன்னிலையாகியிருந்தனர்.

இதன்போது இருதரப்பினரும் பொலிஸ் ஆணைக்குழு பிறப்பித்த 10 உத்தரவுகளை இதுவரை செயற்படுத்தாமை தொடர்பாக விளக்கமளிப்பதற்காகவே அரசியலமைப்பு சபையில் முன்னிலையாகியிருந்தனர்.

இந்நிலையில் இருதரப்பினரிடமும் விசாரணையை நடத்தப்பட்டது. பின்னர் 14 நாட்களுக்குள் இவ்விடயம் தொடர்பான பிரச்சினைகளை தீர்த்துக்கொண்டு அறிவிக்க வேண்டுமென அரசியல் அமைப்பு சபை, குறித்த இரு தரப்பினருக்கும் அறிவித்தல் விடுத்துள்ளது.