Sep 08

என்ன விளையாட்டு விளையாடுறீங்க? கேப்டனான ரித்விகா!

கேப்டனுக்கான போட்டியில் ரித்விகா வெற்றி பெற்று வரும் வாரத்திற்கான தலைவியாகியுள்ளார். 

பிக் பாஸ் 2 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்குகிறது. இந்த வாரம் வெளியேற்றும் படலத்துக்கு ஐஸ்வர்யா, ஜனனி, மும்தாஜ், விஜயலட்சுமி மற்றும் சென்றாயன் ஆகிய 5 பேரின் பெயர்கள் இறுதிசெய்யப்பட்டன.

இதையடுத்து இதில், அவரவர் தங்களை காப்பாற்றிக் கொள்ள தங்களுக்கு கொடுத்துள்ள டாஸ்க்குகள் மூலம் மற்றவர்களை ஒப்புக்கொள்ள வைக்க வேண்டும். இந்த டாஸ்க்கில், ரித்விகா மட்டும் தோல்வியடைந்து அடுத்த வாரத்திற்காக நேரடியாக நாமினேட் செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்து, இன்றைய நிகழ்ச்சியின் போது அலாரம் அடிக்கும் போது, லக்சூரி பட்ஜெட்டுக்கான நீச்சல் குளத்தில் குதித்து சிறிது நேரம் இருக்க வேண்டும் என்பது போன்று டாஸ்க்கும் கொடுக்கப்பட்டுள்ளது.

இறுதியில், லக்சூரி பட்ஜெட் டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில், வளையம் போட்டு தங்களுக்கு தேவையானவற்றை எடுத்துக் கொண்டுள்ளனர்.