Sep 07

ஐரோப்பாவின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் முதலீடு!

எதிர்வரும் ஐந்து வருடங்களில் ஜேர்மனியில் 11.6 பில்லியன் டொலர் முதலீடுகளை மேற்கொள்ளவுள்ளதாக வளைகுடா நாடான கட்டார் அறிவித்துள்ளது.

இந்த உத்தியோகப்பூர்வ அறிவிப்பை கட்டார் ஆட்சியாளர் ஷேய்க் தமீம் பின் ஹமட் அல் தானி இன்று (வெள்ளிக்கிழமை) அறிவித்துள்ளார்.

நீண்டகால வர்த்தக பங்காளியான ஐரோப்பாவின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த முதலீடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கட்டார் அறிவித்துள்ளது.

இதுவரை கட்டார் 25 பில்லியன் யூரோக்களுக்கு மேல் ஜேர்மன் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.