Sep 07

ஈக்குவடோரில் நிலநடுக்கம்!- கட்டடங்கள் சேதம்

தென் அமெரிக்காவின் மத்திய ஈக்குவடோர் பகுதியில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கமொன்று பதிவாகியதாக, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


ஈக்குவடோரின் மத்திய அன்டியன் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள அம்பட்டோ என்ற நகரிலேயே இந்நிலநடுக்கம் அதிகம் உணரப்பட்டுள்ளது.

நேற்று (வியாழக்கிழமை) பதிவாகிய நிலநடுக்கத்தில் ஒருவர் காயமடைந்ததுடன், அப்பகுதிக்கான மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நிலநடுக்கம் காரணமாக வீடுகள் சிறியளவில் சேதமாகியதுடன், ஒரு சில இடங்களில் நிலச்சரிவுகள் இடம்பெற்றுள்ளதாக ஈக்குவடோர் அனர்த்த முகாமைத்துவ செயலகம் அறிவித்துள்ளது.

அன்டியன் பிராந்தியத்தில் அடிக்கடி நில அதிர்வுகள் பதிவாகி வருகின்ற நிலையில், கடந்த 2016ஆம் ஆண்டு ஈக்குவடோர் பசுபிக் கடலோரத்தை தாக்கிய 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 650இற்கும் அதிகமானோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.