Sep 07

புலம்பெயர் தமிழர்களின் கவனத்தையீர்த்த யாழ்ப்பாணம்; எப்படியென்று தெரியுமா?

யாழில் அண்மையில் இடம்பெற்ற பூப்புனித நீராட்டு விழா ஈழத்தமிழர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது,


ஆம், அண்மையில் யாழ் சண்டிலிப்பாய் பிரதேசத்தில் இடம்பெற்ற பூப்புனித நீராட்டு விழாவில் குதிரை வண்டியிலும், பல்லக்கிலும் பூப்புனித நீராட்டு விழா நடந்த பெண் பிள்ளையை சுமந்து சென்று, மணவறையில் இருந்தி, தமிழர் மரபுப்படி ஆராத்தி எடுத்து அசத்தியுள்ளனர்.

இது மட்டுமின்றி, நிகழ்வில் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் செவ்விளநீர் பானமாக வழங்கப்பட்டது. இதனால், நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் இன்ப அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.

மங்கள நிகழ்வுகளில் சோடா ஐஸ்கிறீம் முதலான மென்பானங்களை அருந்திய காலம் போய், ஆரோக்கியம் நிறைந்த செவ்விளநீர் முதலான இயற்கைப்பானங்களை இவ்வாறான நிகழ்வுகளில் அறிமுகம் செய்வது தமிழர்களிடையே பெரும் பாராட்டை பெற்றுள்ளது