Sep 07

ஹங்கேரி மீதான சட்டங்களை கடுமையாக்க வேண்டும்: பிரான்ஸ்

சட்டத்தின் ஆட்சியை கடைப்பிடிக்காத ஹங்கேரி, போலந்து உள்ளிட்ட பிற நாடுகளின் மீதான சட்டங்களை கடுமையாக்குமாறு, ஐரோப்பிய ஒன்றியத்தை பிரான்ஸ் வலியுறுத்தியுள்ளது.

லக்சம்பர்க் பிரதமருடன் லக்சம்பர்க் அரங்கில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவித்த பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் இதனை தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”ஹங்கேரி சட்டத்தின் ஆட்சியை மதிக்கவில்லை. இதேவேளை, எமதும், ஐரோப்பிய கவுன்சிலனதும் உடன்பாட்டின் அடித்தளமான சட்டத்தை மதிக்காத போலந்து மற்றும் பிற நாடுகளிடம் நாம் தெளிவாகவும், உறுதியாகவும் செயற்பட வேண்டும். இவ்விடயத்தில் நாம் எவ்வித சமரசத்திற்கும் இடம் கொடுக்கக் கூடாது.

ஐரோப்பாவை ஒழிக்க வேண்டும் என விரும்புவோரை ஆதரிக்க முடியாது. இவ்வாறான எண்ணப்பாடு கொண்டவர்களை தோற்கடிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து லக்சம்பர்க் பிரதமர் கூறுகையில், ”ஐரோப்பா நமக்கு தந்தவற்றை நாம் மறந்து செயற்படுகின்றோம் என்றே நினைக்கின்றேன். நான் ஐரோப்பாவிற்காக போராடுவேன்” எனத் தெரிவித்தார்.